பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் தேர்வு

ராமநாதபுரம், மே 10:  ராமநாதபுரம் அருகே குளத்தூர் காலனி தொடக்கப்பள்ளி மேலாண் குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. வட்டார கல்வி அலுவலர் வாசுகி தலைமை வகித்தார். வார்டு உறுப்பினர்கள் ராமு, அழகேசன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அலங்கீர்த்தம் வரவேற்றார். தலைவராக பிரியதர்ஷினி, துணைத்தலைவராக தவசெல்வி தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஊடக ஆவண அலுவலர் பாஸ்கரன், பள்ளி மேலாண் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புது ராஜா, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் புஷ்பலதா பங்கேற்றனர். உதவி ஆசிரியர் தீபா நன்றி கூறினார்.

Related Stories: