இன்று வேளாண் சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

ராமநாதபுரம், மே 10:  ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2021ம் ஆண்டில் தேர்தெடுத்த 61 கிராம பஞ்சாயத்துகளில் இன்று மற்றும் ஜூன் 7ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. 2021க்கான 61 கிராம பஞ்சாயத்துகளில் தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டு கூட்டுறவு சங்க சட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராம பஞ்சாயத்துகளில் ஆழ்துளை கிணறு வேளாண் பொறியியல் துறை மூலம் திறந்தவெளி கிணறுகள், ஊரக வளர்ச்சி துறை மூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

100 சதவீத மானியத்தில் பண்ணை குட்டை, 70 சதவீத மானியத்தில் சோலார் பம்ப்செட் செயல்படுத்தப்படுகிறது. இதர மானிய திட்டங்கள் இக்கிராமங்களில் தேர்தெடுத்த 61 கிராம பஞ்சாயத்துகளில் வேளாண் துறை மூலம் பண்ணை உபகரணங்கள் தொகுப்பு ரூ.42.55 லட்சம், ஜிங்க் சல்பேட் ரூ.6.93 லட்சம், ஜிப்சம் ரூ.6.93 லட்சம், தார்பாய் ரூ.15.75 லட்சம் மதிப்பில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. 61 கிராம பஞ்சாயத்துகளில் நடத்தப்பட உள்ள இச்சிறப்பு முகாமில் பட்டா மாறுதல், வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் பெறுதல், நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பம் பெறுதல், சிறு, குறு விவசாயி சான்று, விவசாய கடன் அட்டை விண்ணப்பம் பெறுதல் மற்றும் கால்நடைகளுக்கான முகாம் நடத்தப்பட உள்ளது என கலெக்டர் சங்கர்லால் குமாவத் தெரிவித்துள்ளார்.

Related Stories: