கோயில் நிர்வாகிகள் அறிக்கை

கோவை, மே 10: கோவை பீளமேடு பாலரங்கநாதபுரம் பெரியமாரியம்மன் கோயில் நிர்வாகிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இக்கோயில் கடந்த 60 வருடங்களாக இயங்கி வருகிறது. இந்நிலையில், கோயில் எதிர்ப்பாளர்கள் சிலர், காழ்ப்புணர்ச்சி கொண்டு தவறான தகவல்களை இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார் மனுவாக அனுப்பினர். அதன் அடிப்படையில் இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. ஆனாலும், தற்சமயம் பழைய நிர்வாகிகளே கோயிலை பராமரித்து வருகின்றனர். கோயில் நகைகள் அனைத்தும் வங்கி பெட்டகத்தில் பத்திரமாக உள்ளது. காழ்ப்புணர்ச்சி கொண்டு தவறான தகவல் பரப்புவதை யாரும் நம்பவேண்டாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

Related Stories: