×

சிட்டி படங்களுக்கான புட்நோட் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது

கோவை, மே 10:  ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட கலெக்டரிம் மனு அளித்தனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையிலான விவசாயிகள் மனு அளித்தனர். மனுவில், ‘‘கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகாவில் உள்ள ஆழியார் அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி. இதில், 3,864,41 கன அடி நீர் இருப்பு வைக்க முடியும். ஆழியார் அணையில் இருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தின் பரப்பளவு சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு அதிகமாக பாசன பரப்பு கொண்டது. ஆழியார் அணையில் இருந்து பரம்பிக்குளம் திட்டத்தின்படி, கேரளாவிற்கு தண்ணீர் தரவேண்டியுள்ளது.

மேலும், கம்பலாபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 13 கிராமங்கள், ஆழியார் பொன்னாலம்மன் துறை கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் கோட்டூர், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சி சுற்றியுள்ள 39 கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தவிர, பொள்ளாச்சி கூட்டு குடிநீர் திட்டம், அம்பராம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலமாக குடிநீர் தேவை மற்றும் விவசாய பயன்பாட்டிற்கு நீர் அளிக்கப்படுகிறது. தற்போது தண்ணீர் பற்றாக்குறை உள்ள நிலையில், ஆழியார் அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு அரசு அனுமதி வழங்கக்கூடாது. பரம்பிக்குளம் ஆழியார் அணைகள் கட்டும் திட்டம் ஒப்பந்தப்படி, ஆனைமலை ஆறு, நல்லாறு திட்டத்தை தமிழக அரசு, கேரள அரசு விரைந்து செயல்படுத்தி நீர் ஆதாரத்தை பெருக்கி உபரி நீர் வந்த பின்பு, ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Putnot Ottansathram ,
× RELATED பயணிகள் கூட்டத்தில் புகுந்த பேருந்து