சுல்தான்பேட்டை சாலையில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்தது

சூலூர், மே 10: உடுமலைப்பேட்டை ஆமந்தகடவு பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், புதிதாக கார் வாங்கி உள்ளார். இவரது காரை செலக்கரச்சல் பகுதியைச் கனகராஜின் நண்பர் கணேஷ்பிள்ளை வாங்கி கொண்டு வெளியே புறப்பட்டார். காரில் ஹேண்ட் பிரேக் போடப்பட்டிருந்தது.

இது தெரியாமல் கணேஷ்பிள்ளை காரை ஓட்டி உள்ளார். ஜல்லிபட்டி அருகே வந்த போது காரின் பின்பக்க டயரில் இருந்து புகை வந்தது. உடனடியாக காரை நிறுத்தி கீழே இறங்கி கணேஷ்பிள்ளை பார்த்துள்ளார். அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அவர், சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. இது குறித்து சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: