கோபி ஜெகன் மெட்டல் மார்ட் கடையில் டெலஸ்கோப் அமைப்பு

கோபி, மே 10:  கோபி அருகே மொடச்சூரில் பாலாசிங்கிற்கு சொந்தமான ஜெகன் மெட்டல் மார்ட் என்ற வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையகம் உள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களின் குழந்தைகளை கவரும் வகையில் ரூ.5 லட்சத்தில் டெலஸ்கோப் அமைக்கப்பட்டுள்ளது. இது நேற்று பொதுமக்கள், மாணவ, மாணவிகள், குழந்தைகள் பார்வைக்காக திறக்கப்பட்டது.

இதில் 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரின் வானியல் தொடர்பான கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பிரபல யூ டியூபர் தர்மதுரை வானியல் தொடர்பாகவும். நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு கூறினார். கேள்வி பதில் நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான டெலஸ்கோபிக் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

கடை உரிமையாளர் பாலாசிங் கூறுகையில், கோபியில் டெலஸ்கோப் வசதி இல்லாததால் அறிவியல், வானியல் தொடர்பாக மாணவ மாணவிகள் கல்வி கற்க டெலஸ்கோப் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடை வாடிக்கையாளர்களின் குழந்தைகளை கவரும் வகையில்  டெலஸ்கோபிக் நிறுவப்பட்டு உள்ளது. அனைத்து மாணவர்களும் தினமும் மாலை 2 மணி நேரமும் முக்கிய கிரகணநாட்களில் அந்தந்த நேரங்களிலும் இலவசமாக மாணவ, மாணவிகள் வானில் ஏற்படும் மாற்றங்களை பார்க்க முடியும், என்றார்.

Related Stories: