ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பண்ருட்டி, மே 10:  பண்ருட்டி அருகே மாளிகைமேடு ஊராட்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கையொப்பத்தை போலியாக இட்டு, தீர்மானம் நிறைவேற்றல், வீடு வழங்கும் திட்டத்தில முறையான பதிவேடு பராமரிப்பு இல்லை. குடிநீர் பிரச்னை தீர்க்கவில்லை, தெரு விளக்கு எரியவில்லை போன்றவை குறித்து, பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை, 100 நாள் வேலை திட்டத்தில் வேலையே செய்யாத நபர்களுககு ஊதியம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. விளையாட்டு பொருட்கள் இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டிற்கு மேலாக வழங்கப்படவில்லை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாளிகைமேடு ஊராட்சி மன்ற நிர்வாகத்தை கண்டித்து அலுவலகம் முன்பு நேற்று அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஜான்சிராணி தென்னரசு தலைமையில் பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பு சங்கதலைவர் தெய்வீகதாஸ் முன்னிலையில் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கை முழுவதும் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் அடுத்தக்கட்ட போராட்டமாக சாலை மறிய போராட்டம் செய்யப்படும் என தெரிவித்தனர். ஆர்ப்பாட்டம் செய்த 350 பேர் மீது வழக்கு

சிதம்பரம், மே 10:   சிதம்பரம் நடராஜரை இழிவுப்படுத்தி யூடியூப் சேனல் ஒன்றில் பதிவிடப்பட்டதாக நேற்று முன்தினம் இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. யூடியூப்பில் பதிவேற்றம் செய்த நபர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் அரசு அனுமதியின்றி போக்குவரத்துக்கு இடையூறாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக இந்து முன்னணி அமைப்பின் கடலூர் மாவட்ட செயலாளர் அருள் மற்றும் 350 பேர் மீது சிதம்பரம் நகர போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: