தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், மே 10:  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் விஜயகுமார், மாவட்ட துணைத் தலைவர் அனந்தகுமார், சங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நாட்டுதுரை கோரிக்கை விளக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் கண்டன உரை நிகழ்த்தினர்.  ஆர்ப்பாட்டத்தில் 1.1.2022 முதல் மூன்று சதவீத அகவிலைப்படி உயர்வினை ரொக்கமாக வழங்கிட வேண்டும். மறு உத்தரவு வரும்வரை முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈடுசெய்யும் விடுப்பினை ஒப்படைத்து பண பலம் பெறும் உரிமையை மீண்டும் வழங்கிட வேண்டும். தேர்தல்கால வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.  முன்னாள் மாநில தலைவர் சுப்பிரமணியன் தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க நிர்வாகி சிவா நன்றி கூறினார்.

Related Stories: