அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்

விருத்தாசலம், மே 10: விருத்தாசலம் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை மூலம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்திற்கான விருத்தாசலம் மற்றும் கம்மாபுரம் வட்டார அளவிலான அனைத்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடந்தது. வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் கென்னடி ஜெபக்குமார் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர்கள் விஜயகுமார், சுமதி, தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் புவனேஸ்வரி, ஆனந்தி, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, நீர்வள ஆதார துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதை சான்று மற்றும் அங்கக சான்றளிப்புத் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறை மூலம் இத்திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்க உரையாற்றினர்.

Related Stories: