7 பேர் மீது குண்டாஸ் குற்ற விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் மைய நூலகத்தில் வாசகர் சந்திப்பு

திருச்சி, மே 10: திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் பெண் வாசகர்கள் சந்திப்பு நடந்தது. எழுத்தார் ராமகிருஷ்ணன் படைப்புகள் பற்றி கலந்துரையாடினர். எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் ``கேள்விக்குறி’’ என்ற புத்தகத்தை பற்றி வட்டார கல்வி அலுவலர் ஜெயலட்சுமியும், ``இதுவும் கடந்து போகும்’’ என்ற புத்தகத்தை பற்றி தேவசேனாவும், உறுபசி என்ற புத்தகத்தை யோகலட்சுமியும் விரிவாக எடுத்துரைத்தனர். கலந்துரையாடலில் பேசிய வாசகர்கள் இந்த நிகழ்ச்சி அதிக புத்தகங்களை படிக்க உந்து சக்தியாக இருக்கிறது என்றனர். மாவட்ட நூலக அலுவலர் சிவகமார், வாசகர் வட்ட தலைவர் கோவிந்தசாமி, வாசகர் வட்ட துணைத் தலைவர்கள் நன்மாறன், வல்லநாடன் இல.கணேசன், ஆலோசகர் அருணாச்சலம், முதல் நிலை நூலகம் தனலட்சுமி உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: