கீழநம்மங்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கிளை கூட்டம்

முத்துப்பேட்டை, மே 10: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த கீழநம்மங்குறிச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை கூட்டம் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் சந்திரசேகர ஆசாத் அனைவருக்கும் கட்சியின் உறுப்பினர் கார்டு வழங்கி பேசினார். இதில் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் சிவசந்திரன், கிளை செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், நிர்வாகிகள் செல்வராசு, பாஸ்கர், கண்ணையன், இளைஞர் பெருமன்றம் கிளை செயலாளர் வெற்றிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: