×

ஒரத்தநாட்டில் திமுக அரசின் திராவிட மாடல் தலைப்பில் பெரியார் திக விழிப்புணர்வு பிரசார பயணம்

ஒரத்தநாடு, மே 10:ஒரத்தநாட்டில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக திராவிடர் விழிப்புணர்வு பிரசார பயணம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே பெரியார் திராவிடர் கழகம் சார்பாக இந்த மாதம் 16ம் தேதி நடைபெறும் மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக பிரசார பேரணி திமுக அரசின் திராவிட மாடல் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஒரத்தநாட்டில் நேற்று பெரியார் திராவிடர் கழகத்தின் ஒரத்தநாடு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட செயலாளர் பாரதி முன்னிலையில் பிரசார பயணம் தொடங்கப்பட்டது நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகளின் மாநில விவசாய அணி துணை தலைவர் ஜெய்சங்கர்,ஒன்றிய செயலாளர் சிவாஜி வழக்கறிஞர் ரவி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Periyar ,Awareness Campaign Tour ,DMK Government ,Orathanadu ,
× RELATED முல்லைப் பெரியாறில் வாகன...