தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி சார்பில் சாலை பயண பாதுகாப்பு விழிப்புணர்வு விழா

தஞ்சாவூர், மே 10: தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி சார்பில் சாலைப் பயண பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடந்தது. விழாவுக்கு வரலாற்றுத் துறைத் தலைவர் கோவிந்தராசு தலைமை வகித்து பேசுகையில், இதுபோன்று விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், கல்லூரி மேம்பாட்டிற்காக ஆணையர் செய்துவரும் சேவைகளையும் பாராட்டினார். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்கள் பயன்பெறும் வகையில் சாலை பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அனைத்து செய்திகளையும் விளக்கி கூறினார். மேலும் அனைத்து மாணவர்களும் உரிமம் எடுப்பதற்கு வசதியாக ஒரு சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்ய உதவுவதாகவும் உறுதி அளித்தார். தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் பேசுகையில், சாலை பாதுகாப்பு என்பது நம் உயிர் பாதுகாப்பு மட்டுமல்ல. ஒரு தலைமுறையின் கனவுப் பாதுகாப்பு. நம் வாழ்க்கையை நம் செய்கைகள் அழகுப்படுத்த வேண்டும். மாணவர்கள் தம் தலை அலங்காரத்தில் துவங்கி, உடை அணியும் விதம், சாலையில் வாகனங்கள் ஓட்டும் விதம் அனைத்திலும் நேர்த்தி இருக்க வேண்டும் என்றார். விழாவை வணிகவியல் துறைத் தலைவரும் கல்லூரித் தேர்வு கட்டுப்பாட்டாளருமான புகழேந்தி நன்றி கூறினார். இதில் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: