×

மெடிக்கல்ஷாப் உரிமையாளர் கொலை வழக்கில் நீதி கேட்டு பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை மக்கள் முற்றுகை கலெக்டர் உறுதியையடுத்து கலைந்து சென்றனர்

பெரம்பலூர்,மே.10: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3ம்தேதி சில சமூக விரோதிகளால் படுகொ லை செய்யப்பட்ட லாடபுரம் மெடிக்கல் உரிமையாளர் நாகராஜன் கடந்த 2ம் தேதி மாமூல் கொடுக்காத காரணத்தால் நாகராஜனை அடித்துக் கொலை செய்த, புதுஆத்தூர் அதிமு க கிளைச் செயலாளர் எழுத்தாணி என்கிற பிரபாகர ன்(26), ரகுநாத், சுரேஷ், கார் த்திக் ஆகிய 4 பேர்களை போலீசார் கைதுசெய்தனர். அஜீத்குமார் என்பவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் 200க்கும் மேற்பட் டோர் நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவ லகத்திற்குத் திரண்டுவந் தனர். கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்காமுன்பு குவி ந்த அனைவரையும் பாது காப்புப் போலீசார் தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட சிலர் மட்டும்உள்ளேசென்று மனு கொடுக்க வலியுறுத்தினர். கலெக்டரை நேரில் சந்தித்து தான் நீதிகேட்க வேண் டும் அதனால் எங்களைத் தடுக்காதீர்கள் எனக் கோஷமிட்ட பொதுமக்கள் போ லீசாரின் தடையைமீறி க லெக்டர் அலுவலகத்திற்கு சென்று, போர்டிகோவில் முற்றுகையிட்டனர். சிறிது நேரம் கழித்து வெளியே வ ந்த மாவட்ட வருவாய் அலு வலர் அங்கயற்கண்ணி போராட்டம் நடத்தும் பொது மக்களைக் கண்டுகொள் ளாமல் சென்றதால் ஆத்தி ரமுற்ற அனைவரும் தரை யில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2பெண்கள், இறந்த வரை நினைத்து ஒப்பாரி பாடியதால், பெண்களில் 10க்கும் மேற்பட்டோர் கண் ணீர்
வடித்தனர்.தொடர்ந்து கலெக்டரை சந் திக்க நேரமானதால் கொந் தளித்த பொதுமக்கள் கலெ க்டரை அவரது அறைக்கே சென்று சந்தித்து முறையிட த்துணிந்து கலெக்டர் அலு வலகத்திற்குள் உள்ளே நு ழைய முற்பட்டனர்.

தகவல றிந்து அங்கே விரைந்து வ ந்த பெரம்பலூர்.டிஎஸ்பி சஞ்சீவ்குமார் பொதுமக்க ளை சமாதானப்படுத்தி க லெக்டரிடம் சென்று பொது மக்களின் வேண்டுகோளை எடுத்துக்கூறினார். இத னை தொடர்ந்து கலெக்டர் வெங்கட பிரியா நேரில் வந்து பொதுமக்களை சந்தித்தார். அவரிடம் பொதுமக்கள் சார்பாக பேசியவர்கள், இறந்தமெடிக்கல் கடை க்காரர் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்க வேண்டும். வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கை துசெய்ய வேண்டும். பஸ் டாப் அருகே பெண்கள், பள் ளி, கல்லூரி மாணவிகளுக்கு எதிராக நடக்கும் ஈவ்டீசிங்கை தடுக்க வேண்டும். லாடபுரத்தில் போலீஸ் ஸ்டேசன் அமைக்கவேண்டும். லாடபுரத்தில் கள்ளத்தனமாக நடக்கும் சந்துக் கடைகளை தடைசெய்யவேண்டும் என்றக் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் போராட்டத்தைத் தொடருவோம் எனக் கூறினர். பொதுமக்களின் கோரிக் கைகளை மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டு நிறைவேற்றுவதாக கலெக்டர் வெ ங்கடபிரியா உறுதியளித்த தால், லாடபுரம் பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு 2மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags : Perambalur Collector's Office ,
× RELATED பெரம்பலூர் கலெக்்டர் அலுவலகம்...