நியாயவிலைக் கடை ஊழியர் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை

குளித்தலை, மே 10: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படியை வழங்ககோரி தமிழக முதல்வருக்கு நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை ஊழியர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்குகோரிக்கைவைத்துள்ளனர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது: தமிழ் நாடு அரசின்கூட்டுறவு துறை நடத்தும் நியாயவிலைக்கடைகளின் பணியாளர்களுக்குவழங்க வேண்டிய (அவ்வப்போதுஅரசுபணியாளர்களுக்கு வழங்குவதைப்போல) இதுவரை வழங்கவில்லை. தேசிய பேரிடர் காலத்தில்கூட எங்களது பணியை திறம்பட செய்தோம். கொரோனா காலத்தில் வீடு வீடாக சென்று டோக்கன் கொடுத்து பணியில் ஈடுபட்டு வந்தோம். ஆனால் எங்களுக்கு மட்டும் அகவிலைப்படி நிறுத்தி வைத்திருப்பது என்ன நியாயம். மேலும் எங்கள் சங்கம் மூலம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தோம். அதனால் தமிழக முதல்வர் நியாவிலை கடை ஊழியர்களின் கோரிக்கையை கருணையோடு பரிசீலனை செய்து வழங்க வேண்டுமென கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: