சிட்லபாக்கம் பகுதியில் நிறுத்தப்பட்ட மினி பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்: எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ கோரிக்கை

சென்னை: சிட்லபாக்கம் பகுதியில் ஒரு வருடத்திற்கு முன்பு நிறுத்தப்பட்ட  2 மினி பஸ்களை பொதுமக்கள் நலன் கருதி மீண்டும் இயக்க வேண்டும், என சட்டப்பேரவையில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பேசினார். சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது தாம்பரம் தொகுதி எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், ‘சிட்லபாக்கம் பகுதியில் பொதுமக்களின் போக்குவரத்து வசதிக்காக 2 மினி பேருந்துகள் (தடம் எண்: எஸ் 3, எஸ் 8) இயக்கப்பட்டு வந்தன. இதன்மூலம் அப்பகுதி மக்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில், இந்த 2 பேருந்துகளையும் ஒரு வருட காலத்திற்கு முன்பே நிறுத்திவிட்டார்கள். தயவுகூர்ந்து அந்த 2 மினி பேருந்துகளையும் அந்த பகுதி மக்களின் வசதிக்காக மீண்டும் இயக்குவதற்கு ஆவனம் செய்ய வேண்டும்,’ என்றார். இதற்கு பதிலளித்து போக்குவரத்து துறை அமை ச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசுகையில், ‘சிட்லபாக்கத்தில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகள் சேவையை மீண்டும் இயக்க வேண்டும், என்ற கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

Related Stories: