அரசு பள்ளி ஆண்டு விழா

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியம் முள்ளிப்பாக்கம் கிராமம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நேற்று நடந்தது. முள்ளிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தேன்மணி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார்.

திருப்போரூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாஸ்கரன், சிவசங்கரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் திருவருட்செல்வி, ஆசிரிய பயிற்றுனர்கள் சேஷாத்ரி, மஞ்சு ஆகியோர் பல்வேறு தேர்வுகள் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். ேமலும், செங்கல்பட்டு நடப்போர் நல்வாழ்வு சங்கம், அப்துல் கலாம் கல்வி மையம் ஆகியவற்றின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் வழங்கி, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் சிவசங்கரன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஏழுமலை, அப்துல் கலாம் கல்வி மைய அறக்கட்டளை நிர்வாகிகள் பிரகாஷ், வினாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: