×

படிக்க விருப்பம் இல்லாததால் மாயமான பள்ளி மாணவன் கொடைக்கானலில் மீட்பு; அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைப்பு

ஆட்டையாம்பட்டி, மே 3: ஆட்டையாம்பட்டி அருகே படிக்க விருப்பம் இல்லாததால், வீட்டைவிட்டு வெளியேறி மாயமான அரசு பள்ளி மாணவனை கொடைக்கானலில் மீட்ட போலீசார், அறிவுரை கூறி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் வீரபாண்டி தோப்புக்காடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் தனபால், சரிதா தம்பதிக்கு கரண்ராஜ் (21) மற்றும் சரண்ராஜ் (17) என்ற 2 மகன்கள் உள்ளனர். இளையமகன் சரண்ராஜ், மல்லசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். கடந்த 25ம்தேதி பள்ளி சென்ற சரண்ராஜ், மாலை வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சரண்ராஜின் தாய் சரிதா ஆட்டையாம் பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், மாயமான மாணவனை தேடிவந்தனர். இந்த நிலையில், மாணவன் சரண்ராஜ், கொடைக்கானலில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் ஆட்டையாம்பட்டி போலீசார் கொடைக்கானல் சென்று மாணவன் சரண்ராஜை மீட்டு, சேலம் அழைத்துந்தனர். விசாரனையில் படிப்பில் ஆர்வம் இல்லாததால், யாரிடமும் சொல்லாமல் வேலை தேடி, கொடைக்கானலுக்கு சென்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சரண்ராஜூக்கு அறிவுரைகளை கூறிய போலீசார், அவரது தாய் சரிதாவிடம் சரண்ராஜ்யை ஒப்படைத்தனர்.

Tags : Kodaikanal ,
× RELATED கொடைக்கானலில் வறண்ட முகம் காட்டும்...