ஏத்தாப்பூரில் திமுக கொடியேற்று விழா

வாழப்பாடி, மே 3: பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், ஏத்தாப்பூர் பேரூராட்சியில் 13, 14 மற்றும் 15வது வார்டு பகுதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக கொடியேற்று விழா நடந்தது. பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் கலந்துகொண்டு, திமுக கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் ஏத்தாப்பூர் நகர செயலாளர் சோமசுந்தரம், பேரூராட்சி தலைவர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் சித்ரா கந்தசாமி, சேகர், பாபு வெங்கடேஸ்வரன், தியாகராஜன், சீனிவாசன், சுரேஷ், ஆனந்தராஜ், சீனிவாசன், ராமசாமி, கருமந்துறை சுரேஷ் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories: