புனித சூசையப்பர் ஆலய தேர்திருவிழா

கிருஷ்ணகிரி, மே 3:கிருஷ்ணகிரி அருகே உள்ள காத்தான்பள்ளம் கிராமத்தில் உள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் 25ம் ஆண்டு தேர் திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் ஆலயத்தில் தர்மபுரி மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் மற்றும் பங்கு தந்தையர்கள் அந்தோணி, மதுரைமுத்து, தேவசகாயம், சுந்தரம், ஆரோக்கியசாமி ஆகியோரின் கூட்டு திருப்பலியும், மறையுரையும் நடந்து வந்தது. இதில் முக்கிய நிகழ்வான 25ம் ஆண்டு வெள்ளி விழா தேர்த்திருவிழா, நேற்று முன்தினம் வான வேடிக்கையுடன் துவங்கியது. அலங்கரிக்கப்பட்ட சூசையப்பரின் தேர்பவனியை கிருஷ்ணகிரி எம்.பி., டாக்டர் செல்லக்குமார் துவக்கி வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டார்.

முன்னதாக மாவட்டத்தின் பல்வேறு ஆலயத்தின் பங்கு தந்தையர்களான சூசை மாணிக்கம், இருதயநாதன், சூசைராஜ், மைக்கோல் ஆன்ரூஸ், சார்ஜ், மார்டின் கிறிஸ்துதாஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி சூசையப்பரின் தேர்பவனியை மந்திரித்தனர். ஆலயத்தில் இருந்து துவங்கிய இந்த தேர்பவனி எலத்தகிரி, புஷ்பகிரி, ஒரப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் வழியாக சென்றது. வழியில் ஏராளமான மக்கள் உப்பு, மிளகுகளை தேர்மீது வீசி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இதில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: