×

மாநில எல்லை பகுதியில் சாலை அமைக்க பூமிபூஜை

ஓசூர், மே 3:ஓசூர் ஊராட்சி ஒன்றியம், கொத்தகொண்டப்பள்ளி ஊராட்சியில் கொத்தகொண்டப்பள்ளி முதல் மரியகன்னளி கர்நாடக எல்லை வரை, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ₹48.42 லட்சம் மதிப்பில் தார்சாலை அமைப்பதற்கான பணிகளை, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சின்னபில்லப்பா, ஊராட்சி மன்ற தலைவர் சுமாமுனிராஜ், பிடிஓக்கள் பூபதி, பாலாஜி, ஊராட்சி செயலர் வெங்கடேஷ், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Bhoomipooja ,
× RELATED கம்பத்தில் பூங்கா அமைப்பதற்கு...