கம்பம் அரசு மருத்துவமனையில் ரூ.12 லட்சத்தில் செவிலியர்கள் விடுதி

கம்பம், மே 3: கம்பம் அரசு மருத்துவமனையில் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் நிதியில், ரூ.12 லட்சம் செலவில் செவிலியர்கள் தங்கும் விடுதி கட்டிடப்பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. கம்பம் அரசு மருத்துவமனையில் செவிலியர்களுக்கான தங்கும் விடுதி நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. இது குறித்து மருத்துவ ஊழியர்கள் கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணனிடம் கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் கம்பம் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, செவிலியர் விடுதி கட்ட ரூ.12 லட்சத்திற்கான நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கான கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை நேற்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் பொன்னரசன், திமுக நகர பொறுப்பாளர்கள் வக்கீல் துரை நெப்போலியன்(வடக்கு), சூர்யா செல்வக்குமார்(தெற்கு) மற்றும்  மருத்துவர்கள், செவிலியர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: