பெட்ரோல், டீசல் விலை குறைக்க கோரி தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி, மே 3: தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக தமமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், தேனி கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் அழகுராணி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, தேவேந்திரகுல வேலாளர்களை எஸ்சி பட்டியலை விட்டு வெளியேற்ற வேண்டும், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட வேண்டும், மதுரை விமானநிலையத்திற்கு தியாகி இமானுவேல் சேகரன் பெயரை வைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை  குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கோசம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

Related Stories: