×

முதல்வரின் சிறப்பான திட்டங்களால் வளர்ச்சி பாதையில் செல்லும் தமிழகம் அமைச்சர் பெரியகருப்பன் பேச்சு

காரைக்குடி, மே 3: காரைக்குடி நகராட்சி சார்பில் 15வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் உயிரி எரிவாயு உற்பத்திகூடம் துவக்க விழா நடந்தது. நகராட்சி ஆணையர் லட்சுமணன் வரவேற்றார். கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். நகர்மன்ற தலைவர் முத்துத்துரை முன்னிலை வகித்தார். திட்டத்தை துவங்கி வைத்து ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு துறைகளில் செயல்படுத்தப்படும் சிறப்பான திட்டங்களால் தமிழகம் வளர்ச்சி பாதையை நோக்கி செல்கிறது. இந்நகராட்சியில் வாரச்சந்தைகளில் சேகரமாகும் 8 டன் குப்பை மற்றும் தினசரி சேகரமாகும் குப்பைகளில் காய்கறி, பழம், பூ போன்ற கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட உள்ளது.முதல்வரின் இதுபோன்ற சிறப்பான திட்டங்களை மக்களுக்கு அர்ப்பணிப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.

காரைக்குடி போன்ற வளர்ந்து வரும் பகுதிக்கு இதுபோன்ற புதிய திட்டங்கள் தேவையாக உள்ளது. கழிவுப் பொருட்களில் இருந்தும் இதுபோன்ற சிறப்பான திட்டங்கள் செயல்படுத்த முடியும். இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தெருவிளக்குகளுக்கும், குப்பை கழிவுகள் இயற்கை உரமாகவும் பயன்படுத்தப்பட உள்ளது. தவிர மக்காத குப்பை ரீ சைக்கிளிங் செய்து சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பப்படுகிறது. குப்பையால் தொற்றுநோய் பரவுவதை தடுக்க அரசு இதுபோன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்துகிறது. இதுபோன்ற திட்டங்களுக்கு முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார் என்றார்.முன்னாள் அமைச்சர் தென்னவன், நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன்,பொறியாளர் கோவிந்தராஜன், உதவி பொறியாளர் சீமா, நகர திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேசு, வர்த்தக அணி கென்னடி கலந்து கொண்டனர்.

Tags : Tamil ,Nadu ,Minister ,Periyakaruppan ,Chief Minister ,
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...