பிரான்மலையில் மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி, மே 3: சிங்கம்புணரி அருகே பிரான்மலை விநாயகர் கண்மாயில் நேற்று மீன்பிடித் திருவிழா நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து பிரான்மலை, வேங்கைபட்டி ஒடுவன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை கண்மாய் முன்பு குவிந்தனர். பாசனதாரர்கள் சார்பாக மீன்பிடித் திருவிழா தொடங்கி வைக்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்மாயில் இறங்கி வலை, ஊத்தா,பரி உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை கொண்டு, கெண்டை, கட்லா ஜிலேபி உள்ளிட்ட மீன்களை பிடித்தனர்.

Related Stories: