பேவர் பிளாக் சாலைக்கு பூமி பூஜை

சிவகங்கை, மே 3: சிவகங்கை நகராட்சி 16வது வார்டு ஆவரங்காடு கம்பர் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சிவகங்கை நகர் 18வது வார்டு மற்றும் 25வது வார்டுகளில் சிறு மின்விசை பம்புகள் மராமத்து செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. 18வது வார்டில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளுக்கு நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியம், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள் சுபைதாபேகம் சீமான், சிஎல்.சரவணன், ராஜேஸ்வரி ராமதாஸ், ராதாகிருஷ்ணகுமார், ராஜபாண்டியன், கீதாகார்த்திகேயன், விஜயகுமார், பாக்கியலட்சுமிவிஜயகுமார், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ராஜஅமுதன் மற்றும் திமுகவினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: