×

கொங்கு மெயின் ரோட்டில் புதிய சாலை அமைக்கும் பணி செல்வராஜ் எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்

திருப்பூர், மே 3: திருப்பூர் மாநகராட்சி 31-வது வார்டு கொங்குநகர் 3-வது வீதியில் ரூ.42.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிக்கான பூஜை நேற்று நடந்தது. இதனை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் துணை மேயர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் தி.மு.க. நிர்வாகி திலக்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதன் பின்னர் திருப்பூர் குமார்நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களுக்கான பூமி பூஜை நடந்தது. இதனையும் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் மற்றும் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags : Selvaraj ,MLA ,Kongu Main Road ,
× RELATED பல்லடம் வாக்குச்சாவடியில் திமுக எம்எல்ஏ தர்ணா