×

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் ரூ.4.01 கோடியில் வளர்ச்சி திட்ட பணி: செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்

திருப்பூர், மே 3: தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜ் தலைமையில், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் முன்னிலையில் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கிவைத்தார். இதன் பின்னர் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலம் வார்டு எண் 23 நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் குமார்நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி, வார்டு எண் 59 ல் சேரன்நகர் தொழிலாளர் காலனியில் ரூ.23.60 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணி, வார்டு எண் 54 வீரபாண்டி பகுதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மைய கட்டிடம் கட்டும் பணி, வார்டு எண் 57-ல் திருக்குமரன்நகர் 2 வது வீதியில் ரூ.50 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மைய கட்டிடம் கட்டும் பணி, 41-வது வார்டு முருகம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மைய கட்டிடம் கட்டும் பணி, வார்டு எண் 40 இடுவம்பாளையம் அம்மன்நகர் லே அவுட்டில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் கட்டும் பணி, வார்டு எண் 53 குப்பாண்டம்பாளையம் சமுதாய நலக்கூட வளாகத்தில் ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்ப்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மைய கட்டிடம் கட்டும் பணி, வார்டு எண் 52-ல் கலெக்டர் அலுவலகம் எதிரில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக கட்டிடம் கட்டும் பணி என ரூ.4.01 கோடி மதிப்பில் புதிய வளர்ச்சி திட்ட பணிகள் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சிகளில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், உமா மகேஷ்வரி, தெற்கு மாநகர திமுக பொறுப்பாளர் டி.கே.டி. மு.நாகராசன்,  கவுன்சிலர்கள் ராஜேந்திரன், துளசிமணி, சுபத்ராதேவி, கவிதா, சாமிநாதன் மற்றும் துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags : Tirupur ,Information ,MB Saminathan ,
× RELATED மாநகராட்சி எல்லைகள்...