×

ஊட்டி - குன்னூர் இடையே சிறப்பு ரயில் இயக்க கோரிக்கை

ஊட்டி, மே 3: சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஊட்டி - குன்னூர் இடையே கோடை சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கோடை காலத்தில் பல மடங்கு அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பாரம்பரியம் மிக்க மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த காலங்களில் சுற்றுலா பயணிகள் நலன் கருதி ஆண்டு தோறும் ரயில்வே நிர்வாகம் ஊட்டிக்கு சிறப்பு ரயில் இயக்குவது வழக்கம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில் இயக்குவதில்லை. இதனால், நீலகிரி மாவட்டத்திற்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இந்த மலை ரயிலில் பயணிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் நலன் கருதி  ஊட்டி - குன்னூர் இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ooty ,Coonoor ,
× RELATED தாவரவியல் பூங்காவில் நடவு...