மலைச்சாரலின் 487வது கவியரங்கம்

ஊட்டி, மே 3: நீலகிரி மாவட்ட தமிழ்க் கவிஞர் சங்கத்தின் 487வது மலை சாரல் கவியரங்கம் நடந்தது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் நடந்த இந்த கவியரங்கிற்கு மன்ற கவிஞர் ஜனார்த்தனன் தலைமை வகித்தார்.

கவியரங்கத்தின் போது, புதிய புத்தகங்கள் வெளியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து, பலரும் பல்வேறு தலைப்புக்களின் கீழ் கவிபாடினர். இந்நிகழ்ச்சியில் புலவர் சோலூர் கணேசன், அமுதவல்லி, மணி அர்ஜூணன், ரமேஷ்ராஜா, ஜே.பி., பெள்ளி, சுந்தரபாண்டியன், மாரியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: