×

திமுக பேரூர் நிர்வாகிகள் தேர்வுக்கு விண்ணப்பம்

ஈரோடு,மே.3:ஈரோடு தெற்கு மாவட்ட பேரூர் நிர்வாகிகள் தேர்வுக்கு விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான சு.முத்துசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடைபெற்றுவரும் திமுக 15வது உள்கட்சி தேர்தலில் பேரூர் நிர்வாகிகள் பொறுப்புக்கு போட்டியிட விரும்புவோர் அதற்கான வேட்புமனுவை நாளை (4ம் தேதி) முதல் தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையர் இளங்கோவனிடம் கட்சியின் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட வேட்புமனுக்களை உரிய கட்டணத்துடன் மே 5ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் ஈரோடு தெற்கு மாவட்ட அலுவலகத்தில் தேர்தல் ஆணையர் இளங்கோவனிடம் உரிய கட்டணத்துடன் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : DMK ,Perur ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி