×

கழுவேலி பகுதியில் கழிவுகள் கொட்டுவதாக வழக்கு கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: தேசிய பசுமை தீர்ப்பாய தென் மண்டல அமர்வில் செங்கல்பட்டு மாவட்டம் படூர் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் மெய்யப்பன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில், படூர் கிராமத்தில் மழைநீர் சேமிப்பு பகுதியாக உள்ள கழுவேலி நிலம் மற்றும் மயானம் அமைந்துள்ள பகுதிகளில் தனியார் மட்டுமின்றி, படூர் கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பையும் கொட்டப்படுகிறது. டேங்கர் லாரிகளால் சுற்றுவட்டார பகுதியில் சேகரிக்கப்படும் கழிவுநீர் முழுவதும் கொட்டப்படுகிறது. இதனால் படூர் முதல் முட்டுக்காடு வரை உள்ள நீர்நிலை பாதிக்கப்படுகிறது. மேலும் தண்ணீர் பாதிக்கப்படுவதால் சுற்றுவட்டார கிராமங்களின் நீராதரமும், நீர்நிலையில் உள்ள உயிரினங்களும் பாதிக்கப்படுன்றன. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கடந்த மார்ச் 24ம் தேதி அளித்த மனு மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் கோர்லபதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், மாவட்ட கலெக்டர், மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறி உத்தரவிட்டனர். மேலும், இவ்வழக்கின் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

ஏர் ஹாரன் பொருத்திய வாகனங்களுக்கு ₹44 ஆயிரம் அபராதம்: தாம்பரம்: தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் சுங்கசாவடி அருகே, தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன், மோட்டார் வாகன 2ம் நிலை  ஆய்வாளர் சோமசுந்தரம் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதிக ஒலி எழுப்பும் வகையில்  ‘ஏர் ஹாரன்’ பொருத்திய 4 கனரக வாகனங்களுக்கு ₹44 ஆயிரத்து 500  அபராதம் விதிக்கப்பட்டு, ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags : Pollution Control Board ,Green Tribunal ,
× RELATED ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுப்புற...