காஞ்சி மாநகராட்சியில் நாளை திமுக வார்டு உட்கட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல்க.சுந்தர் எம்எல்ஏ அறிக்கை

காஞ்சிபுரம், ஏப்.28: காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை காஞ்சி தெற்கு மாவட்டத்தில் அடங்கிய காஞ்சிபுரம் மாநகராட்சியில் வார்டு திமுக நிர்வாகிகள் தேர்தலுக்காக, திமுக தலைமை அனுப்பி வைக்கும் பொதுக்குழு உறுப்பினர் புரசை கோ.மணி தலைமையில் நாளை காலை (29ம் தேதி) காஞ்சிபுரம் கலைஞர் பவளவிழா மாளிகையில் மனுக்கள் பெறப்படுகிறது. ஒன்றிய செயலாளர்கள் கெ.ஞானசேகரன் (உத்திரமேரூர்), பி.எம்.குமார் (காஞ்சிபுரம் ), டி குமார் (சாலவாக்கம்), மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அப்துல் மாலிக் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது. இதில், காஞ்சி மாநகராட்சி வார்டு திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: