திருவள்ளூர் அருகே சுட்டெரிக்கும் வெயிலுக்கு மூதாட்டி பரிதாப பலி

திருவள்ளூர், ஏப்.28:  திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் பன்னூர் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (80). இவர் நேற்று தினம் தனது வீட்டிலிருந்து  அவருடைய பெரிய மகள் முருகம்மாள் வசிக்கும் காந்தூர் பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது  சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தாகம் எடுத்து சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் . நேற்று திருவள்ளூர் பகுதியில் 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.  இதுதொடர்பாக மப்பேடு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories: