எம்ஜிஆர் மார்க்கெட்டில் மேயர் திடீர் ஆய்வு

ஓசூர், ஏப்.28:  ஓசூர் மாநகராட்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு எதிரில் உள்ள எம்ஜிஆர் காய்கறி மார்க்கெட்டில், மாநகர மேயர் சத்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், கழிவறை, சந்தை பகுதி உள்ளிட்டவற்றை ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாநகர ஆணையாளர் பாலசுப்ரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா, 26வது வார்டு கவுன்சிலர் ஷில்பா சிவக்குமார், மாநகர துணை செயலாளர் நாகராஜ், வார்டு நிர்வாகிகள் முருகன், சங்கர், முருகன், இக்ரம் அகமது, ஜெய் ஆனந்த், ஹரி பிரசாத், ரெட் சுரேஷ், கார்த்திக், மஞ்சுநாத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: