இலவச மருத்துவ முகாம் விழிப்புணர்வு பேரணி

தர்மபுரி, ஏப்.28: தர்மபுரி வட்டார வளமையம் சார்பில், 0-18 வயது வரையிலான மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு வரும் 30ம்தேதி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. இம்முகாமில், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற ஏதுவாக, பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது.இதனை நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில், வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இப்பேரணி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள், நகராட்சி அலுவலகம் வழியாக சென்றது. முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, கல்வி உதவித்தொகை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: