நரிக்குடி அருகே பீரோவை உடைத்து 18 பவுன் திருட்டு

காரியாபட்டி, ஏப். 28: நரிக்குடி அருகே பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து 18 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். நரிக்குடி அருகே கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கற்பகவள்ளி (28). இவர் நேற்று காலையில் தனது 3 குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை எடுப்பதற்காக வீட்டின் கதவை பூட்டிவிட்டு சாவியை வீட்டின் முன்பு இருந்த கட்டிலில் மறைத்து வைத்து விட்டு, திருச்சுழிக்கு சென்றுள்ளார். அப்போது கற்பகவள்ளி வீட்டின் அருகே வெல்டிங்கடை வைத்திருக்கும் செல்லப்பாண்டி என்பவர் கற்பகவள்ளிக்கு சென்போனில் அழைத்து உங்களது வீட்டின் பின்கதவு திறந்து கிடப்பதாக கூறியுள்ளார்உடனே கற்பகவள்ளி வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டினுன் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு இருந்தததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த துணிகள் சிதறியதோடு அத்துடன் பீரோவில் இருந்த 18 பவுன் தங்க நகைகளையும் மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. கற்பகவள்ளி அளித்த புகாரின் பேரில் நரிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரழைக்கப்பட்டு கைரேகைகள் எடுக்கப்பட்டன. இதுகுறித்து நரிக்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டிய வீட்டில் பீரோவை உடைத்து நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: