×

இடமலைக்குடியில் கல்வி சான்றிதழ் பெற 40 கிமீ அலையும் மக்கள்

பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க கோரிக்கை
மூணாறு, ஏப். 28: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இடமலைக்குடி. மாநிலத்திலேயே பழங்குடியின மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் பஞ்சாயத்து இதுவாகும். சொந்த ஊராட்சி அலுவலகத்துக்கு செல்ல ஒரு நாள் பயணிக்க வேண்டிய அவலநிலையில் இடமலைக்குடியில் உள்ள ஆதிவாசி குடும்பத்தினர் உள்ளனர். தேவிகுளத்தில் செயல்பட்டு வரும் இவர்களின் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 40 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும் என்பதே தற்போதைய நிலை. கேரளாவில் உள்ள ஒரே பழங்குடியினர் ஊராட்சியாக இடமலக்குடி உருவானதில் இருந்து தாலுகா தலைமையகமான தேவிகுளத்தில் பஞ்சாயத்து அலுவ
லகம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இடமலைக்குடி வளர்ச்சிக்கு அரசு கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்குகிறது. மருத்துவமனை, பஞ்சாயத்து அலுவலகம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் உள்ளது. ஆனால், குழந்தைகளின் கல்வி மற்றும் இதர தேவைகளுக்கு சான்றிதழ் தேவைப்படும் போது நாள் முழுவதும் பயணித்து வேறொரு பஞ்சாயத்து அலுவலகத்திற்கு அலைய வேண்டிய நிலைக்கு மட்டும் தீர்வு இல்லை. பஞ்சாயத்து கமிட்டி, பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் இந்த தேவை மட்டும் சாத்தியமில்லைஎன்ற

Tags : Idamalaikudi ,
× RELATED இடமலைக்குடியில் கல்வி சான்றிதழ் பெற 40...