×

கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கருத்தரங்கு

கோவில்பட்டி, ஏப். 28: கோவில்பட்டி  லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு  அமைப்பு சார்பில் 3ம் ஆண்டு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு தொழில் முனைவோர்  மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் பயிற்சி முகாம், 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவர்  சண்முகசுந்தரம் கலந்து கொண்டு பேசினார். அமைப்பியல்  துறை தலைவர் சங்கரநாராயணன் வரவேற்றார்.    

முகாமில் முன்னாள் மாணவர்கள்  மற்றும் தற்போதைய தொழில் முனைவோர்களான தினேஷ்குமார், அபினேஷ்,  நேகா நாஜலெட்சுமி, காளிராஜ், முருகன், அசோக்குமார், பாலகுரு, சிவராஜ்,   கண்ணன், சிவராஜ், சாந்தகுமார், பாலமுருகன், சின்னத்துரை, ராமதாஸ்,  முத்துதமிழ் ஆனந்த், முன்னாள் மாணவரும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின்  மேலாளருமான மணிமாறன் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக நேஷனல் பொறியியல்  கல்லூரி பேராசிரியர்கள் சங்கர், கணபதிராம் ஆகியோர் கலந்து கொண்டு தொழில்  முனைவோர் யார்? தொழில் முனைவோருக்கான திறமைகள், புதிய யுக்திகள்,  தன்னம்பிக்கை வளர்த்தல் மற்றும் புதிய தொழில் துவங்க வங்கி கடன் வசதிகள்,  அறிக்கை தயார் செய்தல் ஆகிய தலைப்புகளில் பேசினார்.

நிறைவு  விழா கருத்தரங்கில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்க 5வது மண்டல ஒருங்கிணைப்பாளரும், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி  இயற்பியல்துறை விரிவுரையாளருமான ராஜேஷ் கலந்துகொண்டு பேசினார். நிகழ்ச்சியில் 3ம் ஆண்டு மாணவ, மாணவிகள் 400 பேர்  கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர்  கே.ஆர்.அருணாசலம் ஆலோசனைப்படி பயிலக முதல்வர் வழிகாட்டுதலில் தொழில்  முனைவோர் மேம்பாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆசிரியர்கள்  செய்திருந்தனர்.

Tags : Entrepreneurship Development ,Lakshmi ,Ammal Polytechnic College ,Kovilpatti ,
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...