நெல்லை, ஏப். 28: நெல்லையில் கோரிக்கை அட்டை அணிந்து வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை கோட்ட வணிகவரித் துறை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வணிகவரித் துறை சங்கங்களின் கூட்டமைப்பின் நெல்லை மாவட்டச் செயலாளர் ரவிசங்கர் தலைமை வகித்தார். மாநில நிர்வாகி முருகன், மாநில செயலாளர் கற்பகம், நெல்லை கோட்ட நிர்வாகி மதி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கினர்.
இதில் திரளாகப் பங்கேற்றோர், 1000 துணை மாநில வரி அலுவலர் பதவி உயர்வு உட்பட கடந்த ஆண்டு சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளை உடனே செயல்படுத்த வேண்டும். கோட்ட அளவிலான இடமாறுதல்களை உடனே வாபஸ்பெற வேண்டும். நேரடி பணி நியமனங்களை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். கவுன்சலிங் முறையில் முழுமையாக பொது மாறுதல் நடத்த வேண்டும். காதித் துறையில் இருந்து வரப்பெற்ற ஊழியர்களுக்கு சிறப்பு நிலை பிரச்னையில் தீர்வு காண வேண்டும். 2036 பணியிடங்களை தக்க வைப்பதோடு, 13 ேகாட்டங்களை உருவாக்க வலியுறுத்தினர். இதில் கூட்டமைப்பின் நெல்லை மாவட்ட துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை அட்டைகளை அணிந்தபடி கோஷமிட்டனர். சிவகாசி மாவட்டத் தலைவர் வைரவசுந்தரம் நன்றி கூறினார்.