முத்துப்பேட்டை அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநாடு, கூட்டம்

முத்துப்பேட்டை, ஏப்.28: முத்துப்பேட்டை அடுத்த எடையூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற பேரவை மாநாடு, கூட்டம் ஒன்றிய பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டு கொடியினை மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் ஏற்றி வைத்து பேசினார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் முருகையன், மாநிலக்குழு உறுப்பினர் அம்புஜம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தட்சிணாமூர்த்தி, இளைஞர் பெருமன்ற முன்னாள் செயலாளர்கள் உமேஷ்பாபு, சிவசந்திரன், ஜோதிபாசு, சரவணன், முன்னாள் ஒன்றிய தலைவர் சுடர் ரமேஷ் ஆகியோர் பேசினர். மாநாட்டில் ஒன்றிய தலைவராக சுதன், துணை தலைவர்களாக குமார், ஆனந்தராஜ், ஒன்றிய செயலாளராக பாலமுருகன், துணை செயலாளர்களாக கஜேந்திரன், பிரபாகரன், ஒன்றிய பொருளாளராக இளங்கோவன் ஆகியோர் புதிய பொறுப்பாளாராக தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: