நுகர்வோர் பண்டகசாலை ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்

திருவாரூர், ஏப்.28: திருவாரூர் நுகர்வோர் பண்டகசாலை ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என சங்க கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் முருகையன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சாந்தகுமாரி, பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்டக சாலை பொது மேலாளர் காளிதாஸ் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதில் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வேண்டும், தலைமை அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அலுவலக கட்டிடங்களையும் சீரமைக்க வேண்டும், களப்பணியாளர் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: