×

திருமங்கலம் 19வது வார்டில் புதிய சின்டெக்ஸ் தொட்டி நகராட்சி தலைவர் நடவடிக்கை

திருமங்கலம், ஏப்.28: திருமங்கலம் 19வது வார்டில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் சின்டெக்ஸ் தொட்டி இருப்பதாக தினகரனில் வெளிவந்த செய்தியை தொடர்ந்து நகராட்சி தலைவர் சிறப்பு கவனம் செலுத்தி உடனடியாக புதிய சின்டெக்ஸ் தொட்டி நேற்று வைக்கப்பட்டது.திருமங்கலம் நகராட்சி 19வது வார்டு கோட்டைதெருவில் கடந்த பல ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் தொட்டி உடைந்து போய் காட்சியளித்தது. இது தொடர்பாக தினகரனில் செய்தி வெளியானது. தகவல் அறிந்த திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன் ஆகியோர் உடனடியாக உடைந்த தொட்டி மாற்றப்படும் என தெரிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து நேற்று கோட்டைதெருவில் உடைந்த தொட்டி அகற்றப்பட்டு புதியதாக 1000 லிட்டர் கொள்ளளவு உள்ள சின்டெக்ஸ்தொட்டி மாற்றப்பட்டது. உடனடியாக தொட்டியை மாற்றிய நகராட்சி தலைவர் ரம்யாமுத்துக்குமார், துணைத்தலைவர் ஆதவன், திமுக கவுன்சிலர் சாலிஹாஉல்பத்ஜெய்லானி ஆகியோருக்கும் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும் 19வது வார்டு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : New Syntex ,Thirumangalam ,
× RELATED திருமங்கலம் பகுதியில்...