×

இன்று இஸ்லாமியர்களின் புனித லைலத்துல் கத்ர் இரவு பள்ளிவாசல்களில் சிறப்பு வழிபாடு

மதுரை, ஏப்.28: இன்று இஸ்லாமியர்களின் புனித இரவான ‘லைலத்துல் கத்ர்’ இரவை ஒட்டி, பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை, வணக்க வழிபாடுகள் நடக்கின்றன.முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் 30 நாள் நோன்பு நோற்கின்றனர். ரமலான் நோன்பின் இறுதி பத்து நாட்களில் ஓர் ஒற்றைப்படை இரவில்தான் திருக்குர்ஆன் அருளப்பட்டது. ‘‘இந்த திருக்குர்ஆனை மகத்துவமிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத்தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்’’ என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகிறார். ‘‘லைலத்துல் கத்ர் எனும் இவ்விரவை ரமலானின் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’’ என்பதும் நபி மொழியாகும். இவ்வகையில் இன்றிரவான 27ம் நாள் இரவாக அது இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த “லைலத்துல் கத்ர்” புனித இரவு இன்றிரவு கொண்டாடப்படுகிறது. இன்றிரவு “லைலத்துல் கத்ர்” புனித இரவை முன்னிட்டு, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களின் பள்ளிவாசல்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.இந்த லைலத்துல் கத்ர் புனித இரவில் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகள் குறித்து மதுரை சதாசிவம் நகர் பள்ளிவாசல் இமாம் மவுலவி ஹாபிஸ் முகமது யாகூப் ஆலிம் உலவி கூறுகையில், ஒரு ஸலாமைக் கொண்டு 4 ரக்அத் நபில் தொழுக வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து சூராவிற்குப்பின் இன்னா அன்ஜல்னா சூராவை ஒரு தடவை, குல் ஹூவல்லாஹூ சூராவை 27 தடவை ஓதி தொழுவதால் பாவமன்னிப்பும், சுவன பாக்கியமும் கிடைக்கும். ஒரு ஸலாமைக் கொண்டு 4 ரக்அத் நபில் தொழுக வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து சூராவிற்குப்பின் இன்னா அன்ஜல்னா சூராவை 3 தடவையும், பின்பு குல் ஹூவல்லாஹூ சூராவை 7 தடவையும் ஓதித்தொழுவதால் மரண வேதனையை எளிதாக்கி வைக்கிறது. தஸ்பீஹ் தொழுகை மிக, மிக சிறப்பானது. இதற்கு நிறைய நன்மைகள் உண்டு. தஸ்பீஹ் நபில் 4 ரக்அத் தொழுக வேண்டும். அதில் “ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்” இக்கலிமாவை 4 ரக்அத்திலும் 300 முறை ஓத வேண்டும். இதுதவிர, லைலத்துல் கத்ர் இரவில், “அல்லாஹூம்ம இன்னக்க அப்வுன் துஹிப்புல் அஃபஃவ ஃபஃபு அன்னி” என்ற துஆவையும் ஓத வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags : Laylat al- ,Islam ,
× RELATED இஸ்லாமியர் பற்றி மோடி சர்ச்சை பேச்சு...