தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியின் பட்டமளிப்பு விழா

தஞ்சாவூர்,ஏப்.28: தஞ்சாவூர், பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியின் 18வது பட்டமளிப்பு விழா பாரத் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தஞ்சாவூர் மாநகராட்சியின் மேயர் சண்.ராமநாதன் பட்டமளிப்பு விழாவில் “மாணவப்பருவம் மகத்தானப் பருவம், கவலையின்றி நமது விருப்பம் போல் வாழும் பருவம். இருந்த போதிலும் அடுத்த இலக்கு என்ன? என்பதை அறிந்து மாணவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். நமது பெற்றோரின் பெயரைச் சொல்லி நம்மை அறிமுகம் செய்து வைக்கும் நிலைக்கு நாம் உயர்ந்தோமானால் அதுவே நமது பெற்றோருக்கு நாம் செய்யும் பெரும் பேராகும்” என்று மாணவர்களிடையே பேருரையாற்றினார். பாரத் கல்விக்குழுமத்தின் செயலாளர் புனிதாகணேசன், பாரத் கல்லூரியின் இயக்குநர் வீராசாமி, பாரத் இன்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்தின் முதல்வர் முத்துக்கிருஷ்ணன் முன்னிலையில் முதல்வர் குமார் ஆண்டறிக்கை வாசித்தார். பாரத் கல்லூரியின் 13 துறைகளை சேர்ந்த 637 மாணவ, மாணவிகளுக்கும், பாரத் இன்டிடியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி நிறுவனத்தின் 20 மாணவ, மாணவிகளுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. பட்டம் பெற்ற மாணவ மாணவியர்கள் உறுதிமொழி ஏற்று தங்கள் பட்டத்தை உறுதிசெய்தனர்.

Related Stories: