×

கும்பகோணத்தில் தமிழ்நாடு எண்டர்டெய்ன்மென்ட் பொருட்காட்சி துவக்கம்

கும்பகோணம், ஏப்.28: கும்பகோணத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே அல் அமீன் பள்ளியின் பின்புறம் உள்ள மைதானத்தில் ஒவ்வொரு ஆண்டின் கோடை காலத்திலும் பொருட்காட்சி நடைபெறும். அதுபோல இவ்வாண்டும் தமிழ்நாடு எண்டர்டெய்ன்மென்ட் பொருட்காட்சியின் தொடக்க விழா நேற்று துவங்கியது. விழாவிற்கு கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் சு.ப தமிழழகன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் சரவணன் முன்னிலை வகித்தார். அல்அமீன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் செயலாளரும் தாளாளருமான கமாலுதீன் ரிப்பன் வெட்டி பொருட்காட்சியை தொடங்கி வைத்தார். விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தஞ்சை மாவட்ட முஸ்லிம் கல்வி சங்கத்தின் தலைவர் முகமது இக்பால், துணை தலைவர்கள் முகமது ஜியாவுதீன், முகமது அன்சாரி, சீமாட்டி சில்க்ஸ் உரிமையாளர் பஷீர் அஹமது, துணை செயலாளர் முகமது ரபி, செயற்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, செயற்குழு உறுப்பினரும், சட்ட ஆலோசகருமான அப்துல் சுபஹான், செயற்குழு உறுப்பினர் சலீம், பொதுக்குழு உறுப்பினர் அயூப்கான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த பொருட்காட்சியில் ராட்சத ராட்டினம், டிராகன் ராட்டினம், டெல்லி அப்பளம் ஸ்டால், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், பெண்களுக்கு தேவையான பேன்சி பொருட்கள், பல்வேறு மிருகங்களின் உருவ பொம்மைகளின் காட்சி அமைப்பு, வீட்டிற்கு தேவையான பர்னிச்சர்ஸ், சமையலறை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது. கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட் கண்காட்சி குழுமத்தை சேர்ந்த ஹக்கீம், அப்பாஸ், சாதிக் ராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Tamil Nadu Entertainment Exhibition ,Kumbakonam ,
× RELATED கும்பகோணத்தில் இறந்த நிலையில்...