×

கீழ்வேளூரில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்

கீழ்வேளூர், ஏப்.28: நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பொது சுகாதாரத்துறை சார்பில் வட்டார அளவில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்க்கு நாகை கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு தலைவர் வாசுகி நாகராஜன், பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர், துணைத் தலைவர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார துறை துணை இயக்குநர் விஜயகுமார் வரவேற்றார். முகாமை நாகை எம்பி., செல்வராஜ் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகத்தையும், பள்ளி மாணவிகளுக்கு மூக்கு கண்ணாடியை வழங்கியும், மக்களை தேடி மருத்துவ மருந்து பெட்டகத்தை வழங்கி பேசினார்.

முகாமில் பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. 35 பேர் ரத்தத்தை தானமாக வழங்கினர். முகாமில் தாசில்தார் அமுதா, வட்டார ஆத்மகுழு தலைவர் கோவிந்தராஜன், உறுப்பினர்கள் பழனியப்பன், அட்சயலிங்கம், கீழ்வேளூர் பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் அருண்பிரபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தேவூர் ஆரம்ப சுகதார நிலையம் சார்பில் சமுதாய வளையல் காப்பு விழா நடத்தப்பட்டது. 40 பெண்களுக்கு எம்பி., செல்வராஜ் வளையல்களை வழங்கி வளைகாப்பை தொடங்கி வைத்தார்.

Tags : Lower Vellore ,
× RELATED கோயில் இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க கோரி முற்றுகை போராட்டம்