இரணியம்மங்கலம் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்

குளித்தலை, ஏப்.28: குளித்தலை அடுத்த இரணியம் மங்கலம் ஊராட்சியில வட்டார அளவிலான கலைஞரின் வரும்முன் காப்போம் திட்ட முகாம் வளையப்பட்டி தனம் உதவி அரசுப்பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா சரவணன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவகுமார் முன்னிலை வகித்தார். முகாமை துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் தொழுநோய் துறை டாக்டர் சாந்தி தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சென்னை மருத்துவ துறை கூடுதல் இயக்குனர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார் இம்முகாமில் தாய் சேய் நலம், சிறப்பு பொது மருத்துவம், எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை சிகிச்சை, பல் மருத்துவம், தோல் நோய் சிகிச்சை, மனநல மருத்துவம், கண் மருத்துவம், பரிசோதனை கொரோனோ பரிசோதனை தடுப்பூசி உள்ளிட்ட அனைத்து பரிசோதனைகளுக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். முகாமில் 1063 பயனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். முகாமிற்கான ஏற்பாட்டினை வட்டார அளவிலான மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், செவிலியர்கள் செய்திருந்தனர்.

Related Stories: