×

அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூரில் இலவச மருத்துவ முகாம்

அரவக்குறிச்சி, ஏப்.28: அரவக்குறிச்சியை அடுத்த மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழை மக்கள் வாழும் இடங்களிலேயே பொது மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் என்ற சுகாதார திருவிழா பொது சுகாதாரத் துறையின் சார்பாக நடைபெற்றது. கரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில் நடைபெற்ற இம் மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு சிறுநீர் பரிசோதனை, ரத்தப் பரிசோதனையில் சர்க்கரையின் அளவு, ஹீமோகுளோபின் உள்ளிட்ட  பரிசோதனைகள் செய்யப்பட்டது. டெங்கு கொசு ஒழிப்பு, தொழுநோய், காசநோய், இரத்த சோகை தடுப்பு, குடும்ப நலம், ஊட்டச்சத்து போன்றவைகள் குறித்து கண்காட்சி அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கர்ப்பிணித் தாய்மார்கள் 18 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், 11 மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் மற்றும் 5 பொதுமக்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்ட அட்டைகள் வழக்கப்பட்டது.மருத்துவர்கள், மனோகரன், தேவசேனா, உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். சித்தா, யுனானி மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது. கண்கள் மற்றும் பிறவி குறைபாடு உள்ளவர்களை மேற்பரிந்துரை செய்து அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 1000க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். முகாமில் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜா, சுகாதார ஆய்வாளர்கள் கருப்புச்சாமி, குழந்தைவேல் உள்ளிட்டோர்  செய்திருந்தனர்.

Tags : Malaikovilur ,Aravakurichi ,
× RELATED கரூர் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி