×

தோகைமலை அருகே புழுதேரியில் இயற்கை விவசாயம் குறித்த விவசாயிகள் மேளா

தோகைமலை, ஏப். 28: தோகைமலை அருகே இயற்கை விவசாயம் குறித்த விவசாயிகள் மேளா நடந்தது. தோகைமலை அருகே புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் சார்பாக 75வது இந்திய சுதந்திர தின அமுத பெருவிழாவின் முக்கிய அங்கமாக இயற்கை விவசாயம் குறித்த விவசாயிகள் மேளா நடந்தது. வேளாண் அறிவியல் மையத்தின் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வேளாண் அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி மற்றும் தலைவா் திரவியம் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் சின்னையன், ஊராட்சி மன்ற தலைவர்கள் புழுதேரி ஊராட்சி தனலட்சுமி மகாமுனி, ஆர்டிமலை ஊராட்சி பொன்னம்மாள் பாலமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக தொழில்நுட்ப வல்லுனர் (வேளாண் விரிவாக்கம்) தமிழ்செல்வி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வேளாண இணை இயக்குனர் சிவசுப்ரமணியன், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் பரமேஸ்குமார் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கினார்.தொடர்ந்து நவீன இயந்திரமான ட்ரோன் கருவி மூலம் உரங்கள் மற்றும் பூச்சி மருந்து தெளிப்பதற்கான செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பின்னர் மத்திய வேளாண் அமைச்சரின் உரையாடலை நேரலையில் விவசாயிகளுக்கு ஒளிப்பரப்பு செய்யப்பட்டதோடு விவசாயிகளுக்காக கருத்துகாட்சி அமைக்கப்பட்டு இருந்தது. இதில் முதன்மை விஞ்ஞானிகள் (மண்ணியியல்) ஜெயபாஸ்கரன், (வேளாண் விரிவாக்கம்) கற்பகம், அன்பில் தா்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் (நுண்ணுயிரியல்) சுந்தர், கலெக்டரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமாபதி ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர். 200 விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்து கொண்டு பயனடைந்தனா்.

Tags : Pudutheri ,Tokaimalai ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...